Wednesday, May 14, 2014

திருவண்ணாமலை கிரிவலம்.. ஒரு முறை சுற்றினால் 1825 தடவை சுற்றிய பலன்!


திருவண்ணாமலை கிரிவலம்.. ஒரு முறை சுற்றினால் 1825 தடவை சுற்றிய பலன்!

நவம்பர் 29,2013

கலியுகத்தில் நமது கர்மவினைகளை நீக்கும் சக்தி அன்னதானத்திற்கும், மந்திரஜபத்திற்கும் மட்டுமே உண்டு என்பதை  ஆன்மீக குரு திரு. சகஸ்ரவடுகர் அவர்கள் கண்டறிந்துள்ளார். அன்னதானம் பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது: நாம் வசிக்கும் ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம் காசிக்குச் சென்று ஒரே ஒரு நாள் மூன்று வேளைகளும் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகமான புண்ணியம் அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும். நாம் பிறந்தது முதல் நமது இறுதிநாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில் 1,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம்,துவாதசி திதி வரும் நாளில் அண்ணாமலையில் மூன்று வேளைகளும் ஒருவருக்கு (காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவில் ஒருவர்) அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும். மேலும்,மறுபிறவியில்லாத முக்தி துவாதசி அன்னதானம் செய்வதாலேயே கிடைத்துவிடும்.



இந்த பேருண்மையை சிவமஹாபுராணத்தில் வித்யாசார சம்ஹிதை தெரிவிக்கிறது. துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும் நாளில் நமது ஆன்மீக குருவின் தலையில் அன்னதானம் செய்தால் மேலே கூறிய எண்ணிக்கையை விட ஆயிரம் மடங்கு புண்ணியம் நம்மை வந்து சேரும்.இதனால்,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;நமது அனைத்து கர்மவினைகளும் நம்மைவிட்டு முழுசாக நீங்கிட இந்த சொர்ணாகர்ஷண கிரிவலம் ஒரு காரணமாக அமைந்துவிடும்.  

ஒரே ஒரு சனிப்பிரதோஷம் அன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து வருடங்களுக்கு(365 *5 = 1825 நாட்கள்) தினமும் கிரிவலம் சென்றதற்கான பலன்கள் கிடைக்கும்; மேலும்,சனிப்பிரதோஷ நேரத்தில் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டு,பிரதோஷ நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் 1825 நாட்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதை சித்தர்களின் தலைவரான கும்பமுனி தனது பாடல்களில் தெரிவிக்கிறார். 

சுவாதி நட்சத்திரமும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே வரும் ஓர் அற்புத நிகழ்வாகும்;அத்துடன் துவாதசி திதியும் சேர்ந்து வருவது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும்;அதையே சொர்ணாகர்ஷண கிரிவலநாள் என்று அண்ணாமலை ஏடு தெரிவிக்கிறது.இந்த நன்னாளில் நமது குருவுடன் கிரிவலம் செல்பவர்கள் பலத்த பூர்வபுண்ணியம் மிக்கவர்கள் என்றும்,அவர்களின் கர்மவினைகள் மழையில் கரையும் உப்பைப் போல கரைந்து காணாமல் போய்விடும் என்றும் விவரிக்கிறது. 

30.11.2013 சனிக்கிழமை அன்று துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும்,சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து இப்பேர்ப்பட்ட பெருமைகளுடன் வர இருக்கிறது. இந்த நன்னாளில்,காலை 7 மணிக்கு  ஆன்மீககுரு சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் சொர்ணாகர்ஷண கிரிவலப் பயணம் புறப்படுகிறது. பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பது அவசியம்;அவ்வாறு புறப்படும் போது,ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும்,அன்னதானத்தின் நவீன வடிவமாகிய இட்லிகள் நிரம்பிய பார்சல்களை உடன் கொண்டு செல்லவேண்டும் கிரிவலப் பயணத்தின் போது ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்துக் கொண்டே செல்வோம்;ஏனெனில்,ஒரே ஒருமுறை ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தாலே 3,00,000 தடவை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்கான பலன்கள் கிட்டும் என்று அண்ணாமலையாரே உபதேசித்திருக்கிறார்.

இதைத்தவிர,வேறு எந்த வீண்பேச்சும் பேசாமல் கிரிவலம் செல்வோம்;கிரிவலப்பயணத்தின் போது இட்லி தானம் செய்வோம்;நாம் கொண்டு செல்லும் ஐந்து கிலோ நவதானியங்களையும் நமது கைகளால் கிரிவலப்பாதையின் ஓரங்களில் தூவுவோம்;தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம்மால் தூவப்பட்ட நவதானியங்கள் விரைவில் செடிகளாக வளரத் துவங்கும்;அவ்வாறு வளரத்துவங்கியதும், நமது அனைத்து கிரக தோஷங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும்; நாம் கொண்டு வரும் டயமண்டு கல்கண்டுகளை கிரிவலப் பாதையில் தூவுவோம்;ஒரே ஒரு டயமண்டு கல்கண்டை ஒரே ஒரு எறும்பு எடுத்துச் சென்றாலே நாம் நூறு அந்தணர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த பலன் நமக்குக் கிட்டும்;இதனால்,சனியின் தாக்கம் நம்மை விட்டு முழுமையாக நீங்கிவிடும் என்பது  ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு!  மதியம் 2 மணிக்குள் கிரிவலம் நிறைவடைந்த பின்னர்,மாலையில் நடைபெற இருக்கும் சனிப்பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொள்வோம்;இரவு பள்ளியறை பூஜை வரையிலும் அண்ணாமலையாரின் ஆலயத்தினுள் இருந்தாலே நமது நியாயமான கோரிக்கைகளும், வேண்டுதல்களும் நிறைவேறத் துவங்கும்;பல ஆண்டுகளாக நமக்கு இருந்துவரும் கர்மவினைகளும், சிரமங்களும் முழுமையாக விலகிவிடும்.பள்ளியறை பூஜை நிறைவடைந்ததுமே நேராக (வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும்) நமது சொந்த ஊருக்குத் திரும்புவோம்; இதன் மூலமாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் பலன்கள் அடுத்த சில நாட்களில் நம்மை வந்து சேரும்;சிலருக்கு சில வாரங்களுக்குள் வந்து சேரும்.

ஓம் அருணாச்சலாய நமஹ!

Courtesy_

Also view the related stories

கிரிவலம் நேரம் 2014 

திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பபடுகிறது. பல மா மன்னர்களின் முயற்சியால் நன்கு வளர்ந்து இன்று புகழுடன் விளங்குகிறது. மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் கவிதைகள் மூலம் பாராட்டுகளை பெற்ற ஸ்தலமாக உள்ளது. 

பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு. உலகை உருவாக்கிய மற்ற நான்கு பூதங்கள் நீர், வாயு, ஆகாயம், மற்றும் பூமி. இந்த அழகிய சிவனடியார்களின் கோயில் அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை அடிவாரத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயிலை சென்றடைய காட்பாடி [வேலூர்]. 

ரயில் நிலையத்திலிருந்து சுமார் 80 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 180கி.மீ தொலைவில் உள்ளது. சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார். சிவனை அசைக்க முடியாத மலை என நம்புவதால் பக்தர்கள் சிவனடியாரை அண்ணாமலையார் என்றும் பெயர் சூட்டி வழிபடுகின்றனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. 

லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை. 

தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. 

ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது.இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.

கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.

கிரிவலம் செல்பவர்களுக்கு சில யோசனைகள்

1. பாதணிகள் இல்லாமல் செல்வது பொருத்தமாகும்.
2. கிரிவலம் வரும்போது மலையின் உச்சியை நோக்கியே வலம் வருவது மிகவும் நல்லது.
3. கிரிவலம் பௌர்ணமி தினமும் அல்லது இரவில் செல்வது தான் சிறந்தது.
4. கிரிவலம் செல்பவர்கள் "ஓம் அருணாச்சல" என சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமம் ரமண மகரிஷி ஆசிரமம். மகான்  ரமண மகரிஷி அருணாச்சல கடவுளின் தீவிர பக்தர் ஆதலால் சிவனின் சக்திகளை முழுமையாக பெற்று தனது வாழ்க்கையின் அதிகமான வருடங்களை திருவண்ணாமலையில் கழித்தார். இவருக்கென்று பலலட்ச பக்தர்கள், மற்றும் சிஷ்யர்கள் இருக்கின்றனர்.

Courtesy_

Also view the above concept in English Version

Girivalam 2014 Timing: 14th May 2014 - 2:14 am to 15th May 12:45 AM

The Arunachaleswarar temple at Tiruvannamalai is a very ancient temple in Tamil Nadu. It is said to be around thousand years old and patronised by the great saints and poets of Tamil Nadu. The prominent among them are Appar, Sambamdar, Sundarar and Manickavasagar and Arunagirinathar. This has great reputation among all Shiva devotees since Arunachalaeswar is prayed here in the form of fire, fire being one of the five elements that composed this universe. The other four elements of the panchaboothas are vayu, akash, jalam and earth.This beautiful temple is located at the foot of the Annamalai hills that falls under the Tiruvannamalai district about eighty kilometers away from Vellore town by road.

This temple city can also be reached from Chennai the capital of Tamil Nadu that is around 185 kilometres by road. It is believed that Shiva is also in the form of a hill and hence it is called as Annamalai hill. Anna means all powerful in Tamil and malai means hills. Since this god is considered very powerful thus it is compared to the mountain that cannot be moved and strong. This god being believed to be part of the hill, hence it is also called as Annamalayar among its devotees.

Arunachaleswarar temple has six prakarams around the temple. Every full moon day of the month Girivalam is undertaken by the pilgrims. Lakhs of devotees participate every month in this healthy ritual. This word Girivalam is the origin of the tamil word giri meaning hill and valam means coming around. Hence coming around the hill is called as Girivalam in Tamil. 

To come one full round (Girivalam) the road round the hill, it is around 14 kilometres. And people both young and old religiously go round on the full moon day. It is said to bring in abundant peace or calmness for the mental well being and also refreshing for the physical fitness. 

This abode of Arunachaleswarar, the Annamalai hills at Tiruvannamalai has varied interpretations over the years. It is believed this hills took different forms at different period of time and age. During the Kirthayugam it was in the form of fire. The next Threthayugam it took the form of emerald, known as manikkam in Tamil. In the course of Dweparayugam it existed in the form of gold. Now in Kaliyuagam it has taken the state of rocky hill.

At Arunachaleswarar temple there are eight lingams known as Ashtalingam. They are positioned at different locations and facing various directions. Each lingam signifying different directions of the earth. These lingams are named as Indralingam, Agnilingam, Yamalingam, Niruthilingam, Varunalingam, Vayulingam, Kuberalingam and Esanyalingam.

Each lingam addresses different aspects of man's life and they bless the devotees with different types of benefits. It is believed to be installed by various gods. Also these lingams have a dominant navagraha and praying to each lingam brings forth various benefits that is being bestowed by that navagraha on the devotees who prays to that particular lingam to achieve the desired results.

The first lingam on the Girivalam is the Indra lingam and this lingam has east as its cardinal direction. It is said to be installed by lord Indran the celestial king. The dominant navagraha of this lingam are the sun and sukiran. Worshipping this lingam blesses the devotees with long life coupled with prosperity in abundance. 

The second lingam on the Girivalam is the Agni lingam. This faces the south east direction. The uniqueness of this lingam is that it is the only lingam that is placed on the right side of the path on which one goes Girivalam on the full moon night every month. Praying to this lingam helps one to keep away sickness and to maintain good health. The dominant navagraha of this lingam is Chandran. It also helps the ardent devotees to counter the problems that they come across in the life's journey. This lingam is located near the lotus tank. 

The third lingam on the Girivalam is the Yama lingam. This lingam signifies the south direction. It is said to be installed by the god of death Yama. The dominant graham of this lingam is Sevvai. It has a holy tank known as Simma theertham. Worshipping this Yama lingam relieves the devotees of their financial constraints. 

The fourth lingam on the Girivalam is the Niruthi lingam. The cardinal direction is South East. The dominant graham of this lingam is the Ragu. This was installed by the king of the giants. This lingam also has a holy tank called as Sani theertha. Devotees worshipping this Niruthi lingam are freed of their problems.

The fifth lingam on the Girivalam is the Varuna lingam. This lingam signifies the west direction. This lingam is installed by the Varuna god who is the creator of rain on this earth. The dominant graham of this lingam is the Sani. There is a holy tank named as Varuna theertham. Devotees worshipping this lingam are protected from all critical illness. This Varunalingam also takes care to elevate their social development.

The sixth lingam on the Girivalam is the Vayu lingam. This lingam is placed facing the north west direction. Vayu lingam is installed by the god of air himself known as Vayu baghavan. The graham that is dominant is the Kedhu. Offering prayers to this Vayu lingam gives strength to fight all heart ailments, stomach problems, lung problems and general illness.

The seventh lingam on the Girivalam is the Kuperalingam. This faces the northern direction. The dominant graham is the Guru. And the Kuperan or the god of wealth has installed this lingam. Offering prayers to this lingam regularly helps the devotees to achieve prosperity.

The last lingam on the Girivalam is the Esanya lingam. And this lingam faces the north east direction. The god that installed this lingam is the Esanyan. The graham that dominates this lingam is the Budhan. Praying to this lingam gives peace of mind to devotees and develops a positive attitude in them to achieve success in all their pursuits.

Tips to follow while going Girivalam

1. It is advised that devotees go Girivalam only barefooted.
2. Always view the top of the giri all through their Girivalam.
3. Preferably Girivalam should be undertaken only during full moon nights or else in normal nights. 
4. To chant during Girivalam the namam of Om Arunachala.

Courtesy_

Also view Temple details in Dinamalar

1. In Tamil Version: http://temple.dinamalar.com

2. In English Version: http://temple.dinamalar.com

3. In 360 Degree view: http://www.dinamalar.com

No comments:

Post a Comment

கந்தன் கருணை பாடல்

கோயில்கள் - ஒரு பார்வை

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

குறள் அதிகாரம்: துறவு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350

குறள் விளக்கம் :

மு.வ : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

வலைப்பதிவாளர்கள்

தினமணி ஆன்மீக செய்திகள்

துறவுரை


This Blog Spot is meant for publishing Spiritual and Devotional Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Devotees. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".



எமது வலைப்பதிவில் தேடல்

Google
 

தினமலர்: காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்



தினமலர்: கோயில்கள் விபரம்



எங்கள் வலைப்பதிவை பின் தொடருபவர்கள்

விவரக் குறிப்புகள்

Shiva (359) Vishnu (202) Full Page Photo (101) Pondicherry (101) Murugan (99) Dinamani (88) Mini Story (78) Story (72) Kumbabhishekam (68) Cuddalore (65) Amman (61) Madurai (59) Chennai (52) Car Festival (49) Ariankuppam (47) Dinamalar (47) snippets (43) Ganapathy (42) Episode (41) Invitation (38) Marriage (36) Aanjaneyar (30) Chidambaram (28) Villupuram (28) Varamalar (27) 63 Nayanmars (26) Chithirai Thiruvizha (26) Meenakshiamman (26) Thanjavur (26) Kanchipuram (24) Thiruvannamalai (24) Kumbakonam (23) Nagapattinam (23) Coimbatore (22) Thiruchirappalli (22) Karnataka (21) Thai Poosam (21) Lakshmi (20) Thiruchendur (20) Marriage Koil (19) Article (18) Panguni Uthiram (18) Sengazhuneeramman (18) Dinakaran (17) Kantha Sashti (17) Thirunelveli (17) Villianur (17) 2013 (16) Bangalore (16) Saraswathy (16) THE HINDU (16) Chengalpet (15) Sivarathiri (15) Thiruvarur (15) Vaikasi Visagam (15) Youtube (15) Aadi (14) Dakshinamoorthy (14) Kantha Sashti Viratham (14) Karthigai Deepam (14) Parvathy (14) Andal (13) King Chola (13) Lingam (13) Margazhi (13) Nayanmar (13) Thirugnanasambanthar (13) Thirukalyanam (13) Vinayagar (13) Children (12) Goddess Saraswathi (12) Lakshmi Hayakirivar (12) Mahalakshmi (12) Nayanmars (12) Rameshwaram (12) Sirkazhi (12) Ayappan (11) FAQ (11) Facts (11) Kallazhagar (11) Sivagangai (11) Sri Rangam (11) Thiruvanthipuram (11) Agathiar (10) Bairavar (10) Deepavali (10) Facebook (10) Kerala (10) Mylapore (10) Palani (10) Panruti (10) Slideshow (10) Slogam (10) Sun (10) Temples (10) Varadaraja Perumal (10) Veerampattinam (10) Video (10) Viruthachalam (10) 2016 (9) Daily Thanthi (9) Maariamman (9) Nava Narashimhar (9) Navagiraham (9) Ramanathapuram (9) Saraswathi Pooja (9) Tamil New Year 2010 (9) Thirupathiripuliyur (9) Thiruthani (9) Vaikunda Egadesi (9) Vallalar (9) Vellore (9) 2012 (8) Aashta Bairavar (8) Brihadeswara (8) Kali (8) Kuselar (8) Masi Magam (8) Mayiladudurai (8) Nandhi (8) Padaleeswarar (8) Raasi Palan (8) Sri Lakshmi Narashimhar (8) Sri Ranganathar (8) Sri Vaikundam (8) Sri Villiputhur (8) Thirukazhukundram (8) Thirupathi (8) Veerapathirar (8) Vijayathasami (8) மகா சம்ப்ரோக்ஷணம் (8) 108 Divya Desam (7) Arunachaleeswarar (7) Damaging (7) Gangaikonda Cholapuram (7) Gopuram (7) Kabaleeswarar (7) Koyambedu (7) Mahakumbhabhishekam (7) Maruthamalai (7) Planets (7) Ramalinga Swamigal (7) Saneesvarar (7) திருவந்திபுரம் (7) 2014 (6) Birthday (6) Guberar (6) Guru Bhaghavan (6) How to Worship (6) Jupiter (6) Karaikudi (6) Karudazhvar (6) Kirubanantha Vaariyar (6) Namakkal (6) New Year 2011 (6) Ragigudda (6) Ramayanam (6) Salem (6) Tamil Nadu (6) Tanjore (6) Tanjore Periya Koil (6) Thanjavur Periya Koil (6) Thiruvasagam (6) Thursday (6) Wikimapia (6) Wikipedia (6) 63 Nayanmaars (5) Andhra Pradesh (5) Arthanarisvarar (5) Brahma (5) Education (5) Guru Peyarchi (5) Kalasam (5) Kamatchiamman (5) Madras High Court (5) Mahabalipuram (5) Manikavasagar (5) Narashimhar (5) Nataraj (5) Parthasarathy (5) Pongal (5) Sani (5) Sani Pirathosham (5) Sundaresvarar (5) Tharbaneeswarar (5) Theni (5) Thirunallar (5) Thiruputhur (5) Triplicane (5) Vainavam (5) Wedding (5) 1000 Years (4) Aadiperukku (4) Aamavasai (4) Aashta Bandhana Kumbabhishekam (4) Albums (4) Angalamman (4) Anna Abhishekam (4) Astrology (4) Bull Temple (4) Devanathaswamy (4) Diseases (4) Divya Desam (4) Donation needed (4) Elephant (4) Festival (4) Gangai River (4) Giri Valam (4) Guru Bhagavan (4) Guru Pooja (4) High Court (4) Historical Temples (4) Iyyanar Koil (4) Kailasanathar (4) Karaikal (4) Kethu (4) King Pandiyar (4) Kotta Koil (4) Lord Ramanujar (4) Mamalla (4) Manakula Vinayagar (4) Margazhi Nayagi Andal (4) Miscellaneous (4) Moon (4) Nadarajar (4) Neyveli (4) Pirathosham (4) Profiles (4) Pudukottai (4) Raku (4) Ramar (4) Renovation (4) Rishigal (4) Sedal Thiruvizha (4) Singirikudi (4) Soora Samhaaram (4) Stotram (4) Stuti (4) TV Malai (4) Thillai (4) Thiruvathigai (4) Thoothukudi (4) Uchi Pillaiyar Koil (4) அட்சயதிரிதியை (4) அழைப்பிதழ் (4) Angalaparameswari (3) Archaeological Survey of India (3) Arunachaleswar (3) Aruthra Dharisanam (3) Brahmorsavam (3) Calendar (3) Cauvery (3) Durgai (3) Elephant Vahanam (3) Erode (3) Gangavaragha Nadhieswarar (3) HR and CE Commissioner (3) Hanuman (3) Hanuman Jayanthi (3) Karuda Urchavam (3) King Pallavar (3) King Rajaraja Cholan (3) King Rajarajan (3) Kutralam (3) Lord Krishna (3) Lyrics (3) Maalaimalar (3) Maangalyam (3) Mailam (3) Medicine (3) Mukthi (3) Murugan Koil (3) Name (3) Nammazhvar (3) Navarathiri (3) Pachaivazhiamman (3) Pachaivazhiamman Koil (3) Patteeswarar (3) Perur (3) Poovarasankuppam (3) Potri Slogam (3) Prayer (3) R.K.Nagar (3) Sabarimalai (3) Saivam (3) Sanipeyarchi (3) Shaivam (3) Sivakasi (3) Song (3) Sorgavasal Thirappu (3) Specialty (3) Srinivasa Perumal (3) Thirukarthigai (3) Thirukarthigai Deepam (3) Thirumurai (3) Thiruvahindapuram (3) Thiruvananthapuram (3) Thiruvennainallur (3) Thiruvizhemizhalai (3) Tindivanam (3) Varalakshmi Viratham (3) Viratham (3) Yekhadesi (3) ஆடி (3) எதுதான் நிஜம் (3) சித்தர் (3) புதுச்சேரி சித்தர் (3) விநாயகர் அகவல் (3) 100 Years Old (2) 10th Century (2) 12 Years (2) 2011 (2) 3500 Years Old (2) 360 Degree view (2) Aadhi Sankarar (2) Aadipooram (2) Aani Thirumanchanam (2) Aanmeega affairs (2) Achalpuram (2) Advertisement (2) Arunakirinathar (2) Australia (2) Avaiyar (2) Ban (2) Blessing (2) Brahmapureeswarar (2) Cancer (2) Cave Temples (2) Chamundi Hill (2) Chithra Paurnami (2) Cow (2) Cracks (2) Date of Birth (2) Dhevaram (2) Dindigul (2) Egmore (2) English New Year (2) Ethirkolbadi (2) Examination (2) Ezhumalaivasan (2) Father-in-law (2) Fire (2) Gnanikal Potri Slogam (2) Gokulashtami Day (2) Guru Bakthi (2) Guruvayur (2) History (2) Holy Bath (2) Honey Bee (2) Husband-wife (2) ISKON (2) Idol (2) Iravatheswarar (2) Irumbai (2) Jambukeswarar (2) Justice (2) Kabilar Kundru Koil (2) Kalahasti (2) Kannagi (2) Kanni Raasi (2) Kanniyakumari (2) Karudan (2) Kasi Vishwanathar (2) Kemfort (2) Kizhur (2) Kopparai (2) Kumuli (2) Likitha Nama Jabam (2) Lion Vahanam (2) Locate the Temple (2) Madurai Bench (2) Maghaalaya Aamavasai (2) Mahaballesvar (2) Mahamaham (2) Maharashtra (2) Mandiram (2) Mangalore (2) Mango Tree (2) Mannarkudi (2) Meaning (2) Meenam Raasi (2) Mela Thirumanacheri (2) Melmalaiyanur (2) Mesha Raasi (2) Milk (2) Month (2) Mother (2) Mudaliarpet (2) Muktheeswarar (2) Naalayira Divya Birapantham (2) Nainarmandapam (2) Nallathur (2) Nallur (2) Narashimhar Jayanthi (2) Narathar (2) Nava Kailaya Temple (2) Paadal Petra Sthalan (2) Padmavathy (2) Panchabootha Ssthalam (2) Papanasam (2) Poojai Time (2) Poonthamalli (2) Pralayakaleswarar (2) Private Photos (2) Pune (2) Purataasi (2) Rain (2) Rama Namam (2) Rama Navami (2) Ramanathaswamy (2) Ranganatha Perumal (2) Rathinagiri (2) River (2) Ruining (2) Saibaba (2) Sarabeswarar (2) Saranarayana Perumal (2) Sculptures (2) Sevvai Thosham (2) Silapathigaram (2) Sin (2) South Ahobilam (2) Sri Mushnam (2) Sri Perumputhur (2) Statue (2) Stolen (2) Student (2) Subramaniyaswami (2) Sun Light Reaches Lord Shiva (2) Sundarakandam (2) Swami Malai (2) Swarnapureeswarar (2) Tamil New Year 2008 (2) Tamil New Year 2013 (2) Tamil New Year 2016 (2) Temples visits (2) Thennambakkam (2) Thiruchenkodu (2) Thirukamesvarar (2) Thirukanchi (2) Thirukoilur (2) Thirukoshtiyur (2) Thirukuriputhondar Nayanar (2) Thirumanacheri (2) Thirumanchanam (2) Thirumangaiazhwar (2) Thirumeninathar (2) Thiruppur (2) Thiruthangal (2) Thiruvaanaikaval (2) Thiruvaavaduthurai (2) Thiruvallur (2) Thiruvanaikaval (2) Thiruvanmiyur (2) Thiruvarangam (2) Thiruvenbaavai (2) Thiruvidaimaruthur (2) Thiruvidanthai (2) Thiruvilaiyadal (2) Thiruvottiyur (2) Throwbathiamman Koil (2) Thulaam Raasi (2) Treasure (2) UNESCO (2) Udumalai (2) Ulundurpet (2) Unnamalai (2) Vadalur (2) Vandavasi (2) Vedaranyam (2) Vedham (2) Velachery (2) Vellore Fort (2) Villivakkam (2) Vinayagar Agaval (2) Vinayagar Chathurthi (2) Vinayagar Chathurthi 2008 (2) Virudhunagar (2) Viruthakiriswarar (2) Water (2) Web Albums (2) Website (2) அருணகிரிநாதர் (2) ஏப்ரல் 26 (2) சித்தர்கள் (2) செங்கல்பட்டு (2) திருக்காஞ்சி (2) நாயன்மார்கள் (2) வில்லுடையான்பட்டு (2) ஸ்ரீ கருட புராணம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீசங்கர ஜெயந்தி (2) 08 Vinayagar Pics (1) 10 Car Pavani (1) 1000 (1) 1008 (1) 100th Sankara Jayanthi (1) 1012-1044 AD (1) 1024 (1) 108 Amman (1) 108 Nandhi Slogam (1) 108 Potri Slogam (1) 108 Shiva Slogam (1) 108 நவதிருப்பதிகள் (1) 11th Century old (1) 16 Nama Mantrams (1) 16 Types of Lingam (1) 19 Avatars of Lord Shiva (1) 2010 (1) 2015 (1) 2015-2016 (1) 21 Guru Bhagavan Temples (1) 21 feet Murugan Statue (1) 21 தீய குணங்கள் (1) 24 feet Statue (1) 274 (1) 3 Sun Koil (1) 300 Years Old (1) 5 Faces (1) 5 Powers (1) 5 different personalities (1) 500 Years (1) 51 feet Idol (1) 6 Abodes (1) 64 Sakthi Peedam (1) 64 type of Arts (1) 64 திருவிளையாடல் (1) 8 Types of Lingam (1) 8th Century (1) 9 Living Philosophies (1) 9 வாழ்க்கைத் தத்துவங்கள் (1) AMR (1) Aadhikesava Perumal (1) Aadhikudi (1) Aadhinathar (1) Aadhinayaki (1) Aadi Kiruthigai (1) Aadikamatchi (1) Aadikesavaperumal (1) Aadimoolam (1) Aadisheshan (1) Aalapuzhai (1) Aanandha Thandavam (1) Aandarkuppam (1) Aarani (1) Aathalanallur (1) Abhishekam (1) Acharapakkam (1) Achaya Thirithiya (1) Adhibatha Nayanar (1) Adipureeswarar (1) Adopted Son (1) Advice (1) Agatheeswaran (1) Agriculturist (1) Air (1) Alangaram (1) Ambar Magaalam (1) Anaya Nayanmar (1) Angavai (1) Angureswarar (1) Animals (1) Animation (1) Annamputhur (1) Annapoorani (1) Announcement (1) Anusham Natchathiram (1) Appar (1) Aramvalarthanayagi (1) Aranthangi (1) Arapaleeswarar (1) Arasalar (1) Arasamangalam (1) Archaeological (1) Arjunan Taxi Driver (1) Arts (1) Arupadai Murugan (1) Aruppukottai (1) Asia largest Ganapathy Koil (1) Atheists (1) Athiri Munivar (1) Atteeswarar (1) Attention please (1) Audio (1) Avinasilingeswarar (1) Ayodhyapattnam (1) Azhagar (1) BEHS (1) Bagampriyaal (1) Bagavathi Amman (1) Bahour (1) Bakthavatchalam (1) Bakthavatchaleswara (1) Bakthi (1) Banashankari (1) Beeman (1) Bell (1) Benefits (1) Bharath English High School (1) Bharathiyar (1) Bhavani (1) Bheemeswarar (1) Bill cards (1) Biography (1) Birds (1) Birth (1) Birthday Palan (1) Bodi (1) Boys (1) Brisbane (1) CRPF (1) Can Beat (1) Chandiramouleeswarar (1) Chariot making (1) Cheyyar (1) Chief Minister (1) Chinna Salem (1) Chinnamanoor (1) Chozha Empires (1) Circulars (1) Coins (1) Courtallam water-falls (1) Crocodile (1) Crore Lingams (1) Crow (1) Cumbum (1) Dance (1) Danger (1) Deputy Prime Minister of India (1) Desigar (1) Details about Temples (1) Dhakatur (1) Dhanusu Raasi (1) Dharasuram (1) Dharmapuri (1) Dharpanam (1) Dharshan (1) Dhatchan (1) Dhulabaram (1) Diamond Crown (1) Diary (1) DivShare (1) Divyadesangal (1) Do's and Don'ts (1) Dog (1) Dress Code (1) Eagambaranathar (1) East (1) Em Perumaan (1) Environment (1) Ernakulam (1) Ethists (1) Eyarkon Kalikkama Nayanar (1) Falcon (1) Family (1) Fast (1) Father (1) Female Karudan (1) Female Sabarimalai (1) Fire Marriage (1) Fire Mountain (1) Fish (1) Five Faces (1) Flag Hoisting (1) Flowers (1) Food (1) Forgive (1) Frontline (1) Gajendiravaradhan (1) Ganapathy Homam (1) Garuda Puranam (1) Gayathridevi (1) Gazette (1) Gingee (1) Girls (1) Gnana Saba (1) Gold (1) Golden Temple (1) Gomuktheeswarar (1) Google Map (1) Gowmariamman Koil (1) Greetings (1) Gurukkal (1) Gurukulam (1) Hari Namam (1) Haridwar (1) Healthy Body (1) Hill Temples (1) Holy Rivers (1) Horse Vahanam (1) Hubli (1) Hyderabad (1) IBN TV (1) Idaisuram (1) Idumbavaneswarar (1) Ilayankudi (1) Income-Expenses Book (1) Indian Express (1) Irukkankudi (1) Irumbarai (1) Isaiyanur (1) Iyswarya Veerapathirar (1) Jack Fruits (1) Jajuree (1) Jalakandeswarar (1) Jalakandeswarar Koil (1) Jalanatheeswarar (1) Jeelivaneswarar (1) Jothirlingam (1) Kaalameghaperumal (1) Kaalanthottam (1) Kadaaram Kondaan (1) Kadagam Raasi (1) Kadaimudinathar (1) Kadayam (1) Kalabhairava Temple (1) Kalatheeswarar (1) Kalpakkam (1) Kalyana Avaiyar (1) Kalyana Varatharajar (1) Kamadenu Kalpavruksha (1) Kamadhenu (1) Kambar (1) Kan Thiruzhti Ganapathy (1) Kanaga Durga (1) Kandamangalam (1) Kandhan Karunai (1) Kandullam Makinzhanda Perumal (1) Kanisapakkam (1) Kannappa Nayanmar (1) Kanniga Parameswari (1) Kanyakumari (1) Karamadai (1) Karapuranathar (1) Karikkakom (1) Karpagambal (1) Karparatchaambigai (1) Kartika Vrindavan Utsava (1) Karuda Panchami (1) Karuda Puranam (1) Karumari (1) Karumariamman (1) Karuvarai (1) Karuveli (1) Kathirkamam (1) Kattumannarkoil (1) Kavadi (1) Kayarkanni (1) Keezhai Thirumanacheri (1) Keezhaiyur (1) Keezhapavur (1) Kempfort (1) King Cheran (1) King Koon Pandian (1) King Kulasekara Pandiyan (1) King Mughal (1) King Shivaji (1) King Sibi Sakravarthy (1) King Vijayanagar (1) Kirubapuleeswarar (1) Kodi Maram (1) Kolanjiappar (1) Kollimalai (1) Kolu (1) Koni Amman Koil (1) Koniamman (1) Koodal (1) Koodalazhagar (1) Koodalur (1) Koovam (1) Kovalan (1) Krishnapuram (1) Kuberapureeswarar (1) Kudamuruti (1) Kudamuzhuku (1) Kumaripen (1) Kumba Mela (1) Kumbakanom (1) Kumbam Raasi (1) Kummidipoondi (1) Kumudha Vallai (1) Kundavai (1) Kundrakudi (1) Kurundam (1) Kurungaleeswarar Koil (1) Kuruvithurai (1) Kuzhi (1) L.K.Advani (1) Land (1) Lava-Kusa (1) Lawspet (1) Lenyadri caves (1) Let's Tell (1) Lingam having wings (1) Lingothpavar (1) Links (1) Lord Indiran (1) Lunar Eclipse (1) MP3 (1) Maahaaleeswarar (1) Maanamadurai (1) Maanampatti (1) Maathur (1) Madhana Gopala Swamy (1) Madhya Pradesh (1) Maducarai (1) Madurai Birthday (1) Magara Vilaku (1) Maha Shivaratri (1) Mahabharata (1) Mahalingaswamy (1) Mahalingeswarar (1) Maharam Raasi (1) Mahatma Gandhi Medical College (1) Mahendiramangalam (1) Mahishi (1) Mahorsavam (1) Malaipattu (1) Manchal (1) Manchal Matha (1) Manikka Veenai Enthum song (1) Manimuthar River (1) Manjunatha Swamy Temple (1) Mannaatheeswarar (1) Mannadipet (1) March (1) Markandeyan (1) Maruntheeswarar (1) Marutheesvarar (1) May 10 (1) Meallapperunkarai (1) Meetings (1) Meikkanda Devar Nayanmar (1) Mela Thirupathi Koil (1) Mellore (1) Melmalayanur (1) Melmaruvathur (1) Melparikkalpet (1) Metti (1) Mithunam Raasi (1) Mole (1) Moogambikai (1) Morattandi (1) Museum (1) Muthiyalpet (1) Muthupettai (1) Muzhaiyur (1) Mysore (1) NDTV (1) NHAI (1) Nagercoil (1) Namaskar (1) Nanthanar Nayanmar (1) Narakasuran (1) Narayana Manthram (1) Natchathiram (1) Nava Nathi (1) Nava Thirupathi (1) Navagraha Shaneshwara Temple (1) Neelaayathaatchi Amman (1) New Year 2013 (1) New Year 2016 (1) News (1) Nithiswarar (1) Nithya Kalyana Perumal (1) Nithya Kalyani Amman (1) Nitya Kalyana Perumal (1) Non-payment Tax Movement (1) Notifications (1) Om (1) Omandhur (1) Online Pooja (1) Oothimalai Andavar (1) P.Selvaganapathy (1) Paari Mannan (1) Paarijaatha Vaneswarar (1) Padaalam (1) Padmanabhaswamy (1) Palayamkottai (1) Palikondaan (1) Palladam (1) Palli Kondeswarar Temple (1) Pallikaranai (1) Pancha Paandavar (1) Panchaggam (1) Panchamugam Aanjaneyar (1) Panchavatee (1) Panorama (1) Panthanallur (1) Papanasanathar (1) Paramakudi (1) Parameswari (1) Parents (1) Parikkal (1) Parivara Thalangal (1) Parrot (1) Pasupatheeswarar (1) Pattamangalam (1) Pattieswar (1) Pattieswaram (1) Pattisvarar (1) Pazhaniandavar (1) Pennagadam (1) Peranamallur (1) Periya Puranam (1) Personalities (1) Phamplets (1) Photos (1) Picasa Web Album (1) Pictures (1) Pillai Kari Keta Perumaan (1) Pillaiyarkuppam (1) Pillaiyarpatti Vinayagar (1) Pirugu Maharishi (1) Plastic (1) Police (1) Pollution (1) Polur (1) Ponneri (1) Poojai Schedule (1) Poomadevi (1) Poombuhar (1) Pooram (1) Pralayakala Veerapathirar (1) Pranava Mandiram (1) Prasatham (1) Pratyankara Devi (1) Prayer Book Bank (1) Prithivi Ssthalam (1) Private or Public Temple (1) Procedures (1) Properties (1) Proverbs (1) Puberty Girls (1) Puberty function (1) Pushparatheswarar (1) Pushpavalli (1) Puththirakameshwarar (1) Puthur Murugan Koil (1) Quick Links (1) Quiz (1) RTI (1) Rain Water Harvesting (1) Raja Alangaram (1) Rajaraja Cholan (1) Rajarajeshwari Plagummanavara Temple (1) Rajarajeshwri Nagar (1) Rajasthan (1) Rajendra Chola (1) Ramanjaneya Swamy (1) Ramar Bridge (1) Recommendations (1) Rice (1) Rishaba Vahanam (1) Rishapam Raasi (1) River Festival (1) Rock Fort Temple (1) Roof (1) Round-up Temples (1) Saakkiya Nayanmars (1) Saarumathi (1) Saidapet (1) Sakthi Vikatan (1) Sambaga Sashti Vizha (1) Samundi (1) Sand (1) Sand Ssthalam (1) Sangavai (1) Sangu (1) Sangu Kulam (1) Sanjeevirayar (1) Sanku Poojai (1) Santhi Mukurtham (1) Sarana Kosha Priyan (1) Sarangapani (1) Saravana Poigai (1) Saree (1) Sarvadaari (1) Sathaya Vizha (1) Sathiyamangalam (1) Sathuragiri (1) Savithiri (1) Secret (1) Security forces (1) Seetha (1) Seetha Kalyanam (1) Seethadevi Viratham (1) Self-Poojai (1) Sengundram (1) Shiva Namam (1) Shivagange (1) Sikkal (1) Silver Kavasam (1) Simmam Raasi (1) Singaperumal (1) Singaperumalkoil (1) Siruvani (1) Siruvanthadu (1) Sishtagurunatheswarar (1) Skull Surgery (1) Sky (1) Snakes (1) Sokkanathar (1) Solar Eclipse (1) Solingar (1) Someeswaranathar Thirukoil (1) Soorakudi (1) Sooriyanaar Koil (1) Soothavanaperuman Koil (1) Speech (1) Sponsored Photos (1) Sri Devi (1) Sri Lakshmi Narayana Perumal (1) Sri Lanka (1) Sri Mahalakshmiswarar Koil (1) Sri Neelameghaperumal (1) Sri Nidheeswarar Temple (1) Sri Shaneshwara Swamy (1) Sri Thenupureeswarar (1) Sri Venugopalan (1) Stars (1) Subrabatha Pooja (1) Suki Sivam (1) Sundaramahalingam (1) Sundarar Nayanar (1) Suran (1) Surutapalli (1) Swarnakadeswarar (1) Swawmiyanarayanar (1) Sydney Murugan Koil (1) TN Govt. (1) TTDC (1) Talking Murugan (1) Tamil (1) Taxi Stand (1) Teacher (1) Teleserial (1) Temple (1) Text (1) Thaali (1) Thaduthatkonda Nathar (1) Thakkolam (1) Thambaram (1) Thandu Keerai Neivethiyam (1) Thanjapureeswarar (1) Thayumanavar (1) Theemithi Vizha (1) Theerthakulam (1) Thenthirupperai (1) Thevaram (1) Thiagaraja (1) Thillai Kali Koil (1) Thiripuraree (1) Thiru Aathanur (1) Thirubuvanai (1) Thiruchchuzhi (1) Thiruchenkattankudi (1) Thiruchuzhi (1) Thiruduraipoondi (1) Thirukadaiyur (1) Thirukalar (1) Thirukarupaariyalur (1) Thirukkurippu Thondar (1) Thirukuda Nanneeratu Vizha (1) Thirukudamuzhuku (1) Thirukural (1) Thirumagal (1) Thirumaiyam (1) Thirumangalam (1) Thirumarainathar Koil (1) Thirumoghur (1) Thirunallur (1) Thirunallur Peruman (1) Thiruneermalai (1) Thiruneeru (1) Thirunindravur (1) Thirupaavai (1) Thirupananthal (1) Thirupani Invitation (1) Thiruparkadal (1) Thirupattoor (1) Thiruppanjeeli (1) Thirupunavasal (1) Thiruthalinathar (1) Thiruthangal Nindra Narayanaperumal (1) Thiruththalur (1) Thiruvadichoolam (1) Thiruvarutselvar (1) Thiruvasagar (1) Thiruvathavur (1) Thiruvedagam (1) Thiruvenkadu (1) Thiruverkadu (1) Thiruvetriyur (1) Thiruvettisvarar (1) Thiyagarajar (1) Thulasi (1) Thumb Finger Height (1) Thunder (1) Tirinindravur (1) Tirumala (1) Tiruparankundram (1) Tirupatisaram (1) Tiruvaiyaru (1) Tiruveezhimizhalai Temple (1) Tour package (1) Tourism (1) Tourism Department (1) Tumkur District (1) Twenty 20 (1) Uchi Kaala Pooja (1) Ujjain (1) Ujjivanathaswami (1) Umadevi (1) Useful related links (1) Usilampatti (1) Uthama Naachiamman (1) Uthamachozhapuram (1) Uthamapalayam (1) VIP Pooja Room (1) Vaalmeeghi (1) Vaasthu Girahalakshmi (1) Vadapalani (1) Vaigai Dam (1) Vaitheeswaran Koil (1) Valangaimaan (1) Valli (1) Vallimalai (1) Valmiki (1) Vannikudi (1) Varahi Amman (1) Vavall (1) Vayalur (1) Vazhi Aadimai Konda Nayagi (1) Vedaranyeswarar (1) Vedha Narayanar (1) Vedha Valli (1) Veera Azhagar (1) Veera Jambeeswarar (1) Veeranam Lake (1) Veeraraghavaperumal (1) Vegetable (1) Vekkaliamman (1) Vengadachalapathy Koil (1) Venkateswara Temple (1) Videos (1) Vidya Ganapathy (1) Vijayawada (1) Vikatan (1) Vilakku Puja (1) Vilamal Pathanchali Manoharar (1) Villudaiyaanpattu (1) Vinayagar Chathurthi 2016 (1) Viruchigam Raasi (1) Viruthapuriswarar (1) Visagam (1) Vishwanathar Koil (1) Wednesday (1) Weekly Programmes (1) Well (1) Widow (1) Wikisource (1) Women (1) Yaagam (1) Yagam (1) Yeddyurappa (1) Yediyur (1) a (1) e-darshan.com (1) ePrarthana (1) nChidambaram (1) அங்காள பரமேஸ்வரி அம்மன் (1) அங்காளபரமேஸ்வரி (1) அச்சரப்பாக்கம் (1) அத்ரிமலை (1) அனுமந்தை (1) அன்னம்புத்தூர் (1) அறிய ஓர் எளிய முறை (1) அறுபடை வீடு (1) அஷ்டமி (1) ஆடி வெள்ளி (1) ஆதிமூலப் பெருமாள் (1) இடைக்காட்டு சித்தர் (1) இரண்டு மார்பிலும் (1) இராகு காலம் (1) இறைவன் – இறைவி பெயர்கள் (1) உஜ்ஜயினி காலபைரவர் (1) உடுமலை (1) உருத்திரபாதத் திருநாள் (1) எமகண்டம் (1) ஏ.எம்.ராஜகோபான் (1) ஒதியம்பட்டு (1) கணபதி ஹோமம் (1) கணபதியே வருவாய் (1) கண் திருஷ்டி கணபதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கந்தன் கருணை (1) கந்தர் அநுபூதி (1) கந்தர் அலங்காரம் (1) கன்னியாகுமரி (1) கரிக்ககம் (1) கலியுகம் (1) காசி விசாலாட்சி (1) காசி விஸ்வநாதர் (1) காஞ்சிபுரம் (1) காரிய சித்தி மாலை (1) காளஹஸ்தி (1) காளிப்பட்டி கந்தசாமி (1) கீழ்புதுப்பட்டு (1) கீழ்வேளூர் (1) குமுதம் ஜோதிடம் (1) குரு பெயர்ச்சி பலன்கள் (1) குறிஞ்சிப்பாடி (1) குறுங்காலீஸ்வரர் (1) குற்றாலம் (1) கேடிலியப்பர் (1) கேதார கௌரி விரதம் (1) கைலாசநாதர் (1) கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? (1) சயன கோலம் (1) சரபேஸ்வரர் (1) சிங்கம்பெருமாள்கோயில் (1) சிட்னி முருகன் கோவில் (1) சித்திரகுப்தன் (1) சித்ரா பௌர்ணமி (1) சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1) சிவபெருமான் (1) சிவஸ்தலங்கள் (1) சீரடி சாய்பாபா ஜெயந்தி (1) சுருட்டப்பள்ளி (1) தஞ்சையில் அசோகவனம் (1) தட்சிணாமூர்த்தி சித்தர் (1) தமிழக சபரிமலை (1) தாயுமானவர் (1) தி இந்து (1) திண்டிவனம் (1) தினகரன் ஆன்மீக மலர் (1) தினமலர் ஆன்மீக மலர் (1) திருச்சி (1) திருச்சிற்றம்பலம் (1) திருத்தொண்டர்கள் வரலாறு (1) திருப்பணி பத்திரிக்கை (1) திருப்பதிசாரம் (1) திருப்பாவை (1) திருப்புகழ் (1) திருப்புளிங்குடி (1) திருப்புவனம் (1) திருமலை கொழுந்தீஸ்வரர் ஆலயம் (1) திருமலைவையாவூர் (1) திருவதிகை (1) திருவெம்பாவை (1) திருவெற்றியூர் (1) திருவொற்றியூர் (1) திருவோண நட்சத்திரம் (1) திரெளபதி அம்மன் கோயில் (1) துர்முகி வருடம் (1) துளசி (1) தூக்கணாம்பாக்கம் (1) தென்திருப்பேரை (1) தென்னல் (1) தேவராசு சித்தர் (1) தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் (1) தோன்றிய காரணம் (1) நத்தம் (1) நவ கன்னிகைகள் தீர்த்தங்கள் (1) நாகமுத்து மாரியம்மன் கோயில் (1) நாத்திகர்கள் (1) நைனார்மண்டபம் (1) பச்சைவாழியம்மன் (1) பஞ்சபூத ஸ்தலங்கள் (1) படங்கள் (1) படிப்பு மந்தமா (1) பட்டினத்தார் (1) பனையபுரம் (1) பன்னிரு திருமுறைகள் (1) பரிகாரத்தலம் (1) பழம்புற்றுநாதர் (1) பாகம்பிரியாள் (1) பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட நிகழ்வு (1) பிரத்யங்கிராதேவி (1) புதன் (1) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) புற்றுநோய் (1) பெ. செல்வகணபதி (1) பௌர்னமி பூஜை (1) மகா கும்பாபிஷேகம் (1) மகா சிவராத்திரி (1) மகாமகம் 2016 (1) மகாலக்ஷ்மி (1) மயானக் கொள்ளை (1) மஹோற்சவம் (1) முதன்மை நாட்கள் (1) முத்தியால்பேட்டை (1) முருக பெருமான் (1) மேல்மலையனூர் (1) ராசி பலன்கள் (1) ருத்ராட்சை (1) லட்சுமண சுவாமி சித்தர் (1) லிங்கோத்பவர் (1) வடிவுடையம்மன் கோயில் (1) வாசு தீரவே காசு நல்குவீர் (1) வாரம் ஒரு பாடல் (1) விதிமுறைகள் (1) விநாயகனே.... விணை தீர்ப்பவனே (1) விநாயகர் ஜாதகம் மகிமை (1) விளகேற்றுதல் (1) வீராம்பட்டினம் (1) வீராம்பட்டினம் தல வரலாறு (1) வேலனுக்கு மூத்தவனே (1) ஸ்தபதி (1) ஸ்ரீ நிதீஸ்வரர் (1) ஸ்ரீமுஷ்ணம் (1)

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி

அருள்மிகு காலசம்ஹாரமூர்த்தி அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்

தினமலர் கோயில்கள்

முருகன் புகழ் பாட வாருங்கள்......



இங்கே சென்று பார்வையிடு.....



Popular Posts

அழுக்கு: கந்தையிலே Vs. சிந்தையிலே.....

கந்தையிலே அழுக்கிருந்தால் கசக்கி எடுத்து விடு வெள்ளையப்பா
உன் சிந்தையிலே அழுக்கிருந்தால் சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா

உயிரே அழுக்கு துணி உவர் மன்னே நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை என்னும் பொல்லாத கல்லினிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா
அவன் அருள் என்னும் நிழல்தனிலே வெள்ளையப்பா
இந்த உயிரெல்லம் வாழுதடா வெள்ளையப்பா